Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பிஹாரில் கங்கை நதியில் மிதந்து வந்த 71 சடலங்களும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடையதா?

T

The Leader Desk

மே 11, 2021 • 10:01 AM

பிஹாரில் கங்கை நதியில் மிதந்து வந்த 71 சடலங்களும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடையதா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
  • ஏறக்குறைய இரவு முழுவதும் உடல்களைப் புதைக்கும் பணி நடந்து இன்று காலைதான் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் பக்ஸர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் சிங்,கூறுகையில், “இதுவரை 71 உடல்களைக் கங்கை நதியிலிருந்து மீட்டோம்.
  • இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டது.
  • ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள்வரை தண்ணீரில் கிடந்திருக்க வேண்டும்.
எழுத்து அளவு:

உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அந்த உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்களா என்பதைக் கண்டறிய 71 சடலங்களில் இருந்தும் மருத்துவ அதிகாரிகள் மாதிரிகளை எடுத்துக்கொண்ட பின்பே புதைக்கப்பட்டன. ஏறக்குறைய இரவு முழுவதும் உடல்களைப் புதைக்கும் பணி நடந்து இன்று காலைதான் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

பக்ஸர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் சிங்,கூறுகையில், “இதுவரை 71 உடல்களைக் கங்கை நதியிலிருந்து மீட்டோம். சில உடல்களை நாங்கள் உரிய மரியாதையுடன் புதைத்துவிட்டோம். சில உடல்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் கங்கைக் கரையிலேயே புதைக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

கங்கை நதிக்கரையில் இறுதிச் சடங்கு செய்வோருக்கு மரக்கட்டைகள் விற்பனை செய்யும் ராம் ஆஷ்ரே யாதவ் கூறுகையில், “நதியில் மிதந்துவந்த பெரும்பாலான உடல்களை அதிகாரிகள் மண் அள்ளும் வாகனத்தின் மூலம், ஆழமான குழிகளைத் தோண்டிப் புதைத்தார்கள். இரவு முழுவதும் புதைக்கும் பணி நடந்தது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டது. எத்தனை உடல்களை அடக்கம் செய்தார்கள் எனக் கணக்கிடுவது எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால், இப்போது எந்த உடலும் நதியில் மிதக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

பக்ஸர் மாவட்ட உயர் அதிகாரி கே.கே.உபாத்யாயே கூறுகையில், “நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன. பல உடல்கள் எரியூட்டப்பட்டன. உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களான வாரணாசி, அலகாபாத் நகரங்களில் இருந்து இந்த உடல்கள் நதியில் வந்திருக்கலாம்.

உடல்கள் அனைத்தும் தண்ணீரில் ஊறிவிட்டன. ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள்வரை தண்ணீரில் கிடந்திருக்க வேண்டும். இந்த உடல்கள் எங்கிருந்து வந்தவை என விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்குத் தெரிந்து வாரணாசி, அலகாபாத்திலிருந்து வந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...