இலங்கையில் இருந்து 10ற்கும் மேற்பட்ட படகுகள் ஒரே நேரத்தில் அரிச்சல்முனைப் பகுதிக்குள் ஊடுருவுவதாக பரவிய

தகவலினால் இராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மாவட்டம் அரிச்சல்முனையை அண்டிய பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தனியாரால் உயர்ந்த பிரதேசத்தில் ஓர் தொலை நோக்கி பொருத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருத்தப்பட்டுள்ள தொலை நோக்கியின் மூலம் பகல்வேளைகளில் பார்வையிட்டால் தலை மன்னாரில் பொருத்தப்பட்டுள்ள காற்றாடிகள் முதல் தலைமன்னாரிற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள தீடைகள் வரையில் தென்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்வாறுள்ள தொலை நோக்கியில் நேற்று மாலை பார்வையிட்ட சமயம் சிறிய பிளாஸ்ரிக் படகுகள் 10ற்கும் மேற்பட்டவை இலங்கை இந்திய எல்லைப்பகுதிக்கு அண்மையில் பயணித்துள்ளன.

இதனால் இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு வழங்கிய சமயம் பொலிசாரும் அதனை உறுதி செய்தமையினால் இலங்கையில் இருந்து பெருந்தொகை அகதிகளே படையெடுத்து வருகின்றனர் எனக் கருதி கடற்கரைக்கு அதிக பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரைக்கு சென்ற பொலிசார் நீண்ட நேரமாகியும் படகுகள் கரையை அண்மிக்காது இந்திய எல்லைக்குள் நிற்பதனை அவதானித்து படகுகளை அண்மித்து ஆராய்ந்தபோது அவை அனைத்தும் கன்னியாகுமாரிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களிற்குச் சொந்தமான  படகுகள் என்பதனை உறுதி செய்தமையினால் பரபரப்பு அடங்கியது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி