Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ராஜீவ் வழக்கு 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

T

The Leader Desk

மே 20, 2021 • 3:24 PM

ராஜீவ் வழக்கு 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.
  • பாலு மூலம் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட அந்த கடிதத்தில், பின்வரும் விவரங்களை அவர் தெரிவித்திருக்கிறார்: "இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் எஸ்.
  • தமிழக அமைச்சரவை 2018-ஆம் ஆண்டு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று ஆணை பிறப்பிக்குமாறு அதில் வலியுறுத்தி உள்ளேன்.
  • நளினிக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை அரசியல் சாஸனத்தில் 161வது பிரிவின்படி ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு மூலம் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட அந்த கடிதத்தில், பின்வரும் விவரங்களை அவர் தெரிவித்திருக்கிறார்:

"இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் எஸ். நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க வேண்டுமென நாங்கள் கோரி வருவது உங்களுக்குத் தெரியும்.

எழுவர் விடுதலை குறித்து rashtrapatibhvn-க்கு நான் எழுதியுள்ள கடிதத்தை, அவரது அலுவலகத்தில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் திரு. T.R.பாலு அவர்கள் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை 2018-ஆம் ஆண்டு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று ஆணை பிறப்பிக்குமாறு அதில் வலியுறுத்தி உள்ளேன்.

நளினிக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை அரசியல் சாஸனத்தில் 161வது பிரிவின்படி ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற மூவருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக அறிவித்தது.

ஸ்டாலின்

இந்த ஏழு பேரும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவர்களது மீதமுள்ள தண்டனையைக் குறைத்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் கோரிவருகின்றன. தமிழக மக்களும் அதையே விரும்புகிறார்கள்.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த ஏழு பேரின் தண்டனையைக் குறைத்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இந்த வழக்கை சிபிஐயின் பல்நோக்கு புலனாய்வுக் குழு விசாரித்தது என்பதால், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டது. ஆனால், யார் வழக்கை விசாரித்தது என்பதற்கும் தண்டனையைக் குறைப்பதற்கும் தொடர்பில்லையென உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அதற்குப் பிறகு, இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உண்டு என தமிழக ஆளுநர் முடிவுசெய்தார். ஆகவே மாநில அரசின் பரிந்துரையை அவர் தங்களுக்கு அனுப்பிவைத்தார்.

இந்த ஏழு பேரும் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து, பெரும் விலை கொடுத்திருக்கின்றனர். அவர்களது தண்டனை குறைப்பு மீது முடிவெடுப்பதில் ஏற்கெனவே மிகுந்த தாமதம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய கொவிட் சூழ்நிலையில், சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென நீதிமன்றங்களும் கூறிவருகின்றன.

ஆகவே, 2018 செப்டம்பர் 9ஆம் திகதி தமிழக அரசு செய்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்று இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை வெளியிட வேண்டும்"

1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கு அருகில் உள்ள திருப்பெரும்புதூரில் கொல்லப்பட்டார். அவருடைய கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்த ஏழு பேரும் 1991ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...