உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலை தடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணைகளையும் முடிவிற்கு கொண்டுவருவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி