"முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைத் தூக்கில்

தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும்" என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த வலியுறுத்தினார்.

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதாது. இதைவிடப் பெரிதாக தண்டனை வழங்கி இருக்க வேண்டும்.

“அப்பாவி மக்கள் கொல்லப்படும் வரை பார்த்துக்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் இல்லாததால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த சாகர காரியவசம், தேர்தலில் வெற்றிக்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி