எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என அரசியல்

விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்திற்காக குரல் கொடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அதன் ஜனநாயகம், அதன் ஆட்சி மற்றும் அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இன்றியமையாத நேரம் இது.

மார்ச் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பதும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அவர்களின் எதிர்காலத்திற்காக குரல் கொடுப்பதும் அதில் அடங்கும்.

நல்லிணக்கம் தொடர்பான தேசிய உரையாடலை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது.“ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி