இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 3 ஆயிரத்து 250 அதிதிகள்

அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் அடங்குகின்றனர்.

இதில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறியமுடிகின்றது.

அதிக பணம் செலவழித்து இந்த நிகழ்வை நடத்துவதே இதற்குப் பிரதான காரணம் என்று சஜித் தரப்பும் அநுர தரப்பும் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவாரிக்கே வன்னியலதோவும் கோடரியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி