சிறுபான்மையினர் கடந்த காலங்களில் தாங்கள் பட்ட அவஸ்தைக்கெல்லாம் முடிவும் விடிவும் காண இந்த ஜனாதிபதித் தேர்தல் கனிந்து வந்துள்ள வாய்ப்பாகப் பார்க்க

முடிவதாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது பிரச்சார பொதுக்கூட்டம் ஏறாவூர் நகரில் வெள்ளிக்கிழமை 18.10.2019 இரவு இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம், இது ஒரு வித்தியாசமான தேர்தல், இரண்டு பிரதான வேட்பாளர்களும் தங்களது கட்சிக்குள்ளேயே போட்டியிட்டுத்தான் வேட்பாளராகி இருக்கிறார்கள்.

இளம் வேட்பாளரான சஜித்தைக் கொண்டு வருவதிலே இருந்த முழு முதற் பங்கு முஸ்லிம் காங்கிரஸையே சாரும். ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி இந்தக் கைங்கரியத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இறங்கவில்லை. அது சஜித்தை எதிர்கால நம்பிக்கை நடசத்திரமாக்க வேண்டும் என்ற உறுதியுடன்தான் செயற்படுகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களிடையே ஒரு வித சோர்வு நிலை, விரக்தி நிலை காணப்பட்டது உண்மை. நல்லாட்சியில் ஏற்பட்ட இழுபறியும் தடுமாற்றமும்தான் இதற்குக் காரணம். ஆட்சித் தடுமாற்றத்தின்போது 52 நாட்கள் படாத பாடுபடவேண்டியிருந்தது.

அந்தப் போராட்மத்திலும் ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் துணிவோடு களமிறங்கி நீதிமன்றம் வரை சென்றது.அக்கிர ஆட்சிக்கு துணைபோக முடியாது என்பதால் பல போராட்டங்களைச் செய்தோம்.இந்த ஐதே கட்சி என்பதை விடவும் நாடு வேட்பாளரை நம்பியிருக்கிறது. அதுதான் சுவாரஸ்யம்.இந்தப் பலப்பரீட்சையிலே கட்சி இருப்பைப் பாதுகாப்பதற்காக வேட்பாளரை நம்பியிருக்கிற நிலைமை என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.சஜித் எனும் இந்த வேட்பாளர் இல்லையென்றால் கட்சிக்கு இருப்பே இல்லாமல் போகக் கூடிய நிலைமை.

காலிமுகத்திடல் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருடைய கூட்டம். அது அவருடைய வெற்றியின் அடையாளம்.இது ஒரு நாடு தழுவிய ஒரு யுகப் போராட்டம்ஏகாதிபத்திய சக்திகள் இந்த நாட்டுக்குள்ளே செய்கின்ற சித்து விளையாட்டுக்களைக் கண்டு இனியும் வாழாதிருக்க முடியாது.

உருவாகியிருக்கிற இந்த உற்சாகம் குறைந்து விடாது நொவெம்பெர் 17ஆம் திகதி சஜித்தான் ஜனாதிபதி என்று அறிவிக்கும் வரை நாம் போராடித்தான் ஆக வேண்டும்.தற்போதைய வேட்பாளர் சஜித்தின் தந்தை பிறேமதாஸவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இலேசில் வேட்பாளர் அந்தஸ்தைக் கொடுத்து அவரைக் களமிறக்கவில்லை. அவரும் கட்சிக்குள்ளே போராடித்தான் மக்கள் செல்வாக்கோடு வந்தார்.

அவரையும் ஆட்சிபீடம் ஏற்றிய பெருமை மிகப்பெரும் ஆளுமை கொண்ட எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரபைத்தான் சாரும்.தற்போது நாம் சில ஒப்பந்தங்களைச் செய்துதானிருக்கின்றோம். அது தார்மீக நம்பிக்கை, பேச்சுவார்த்தையின் அடிப்படையிலே உள்ள விவகாரம்.தற்போது நாடு இருக்கும் நிலைமையிலே அந்த தார்மீக ஒப்பந்தங்கள் என்னவென்று பொதுவெளியில் வெளியிடமுடியாது முடியாது.பச்சோந்தித் தனமான முட்டாள் தனமான அரசியலில் இருந்து விடுபட யுக மாற்றம் எமக்குத் தேவை.புதிய போக்கிலே இந்த நாட்டைக் கொண்டு போக வேண்டும். அதற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும்.

சிறுபான்மை இனங்களுக்கான தீர்வைப் பற்றி பேசுகின்றவர்கள் அந்தத் தீரவை நாட்டுப் புறச் சிறுபான்மை மக்களுக்கிடையிலே தெளிவுபடுத்தி தீர்வுக்காக ஒத்துழைக்கின்ற நிலைமைக்குக் கொண்டு வருகின்ற நாட்டுத் தலைமையைத் தெரிவு செய்ய வேண்டும். அதுதான் சாணக்கியம். காலத்தின் தேவை. சமயோசிதம்.

சிறுபான்மையினர் இதுவரை காலமும் பட்ட அத்தனை அவலஸ்தைக்கும் முடிவு கண்டாக வேண்டும். அதற்கு சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரில் பெரும்பான்மையானவர்களும் இணைந்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்து விட்டது” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி