தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவின் வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக இணைந்து கொள்ளுமாறு கலைஞர் பிரேமகீர்த்தி த அல்விஸின்

மனைவி நிர்மலா த அல்விஸ், நாட்டின் அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (20) கொழும்பு பொது நூல் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிா்மலா த அல்விஸ் இவ்வாறு தெரிவித்தார்.

வானொலி அறிவிப்பாளராக, பாடல் ஆசிரியராக, மனிதாபிமானமிக்க ஊடகவியலாளராகச் செயற்பட்ட பிரேமகீர்த்தி த அல்விஸ் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்டவில்லை என தான் கூறியிருந்த போதிலும் ஜே.வி.பி அதன் மூலம் பயனைப் பெறாமல் மௌனமாக இருந்ததாகவும், அதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணியிடத்தில் இருக்கும்  கண்ணியமான குனம் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறான கண்ணியமான, தாழ்மையான நபரை வெற்றிபெறச் செய்வதற்கு தூர இடங்களை நோக்கி தனது குரலை எடுத்துச் செல்லுமாறும் நிர்மலா த அல்விஸ் மாநாட்டில் கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி