தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்தடையினால் இந்த தடவை கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சைக்கு தோற்றும்

மாணவர்களாகிய தாம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக மாந்தை கிழக்கு பகுதியில் இந்த தடவை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்கள் உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியிலாவது மின்சார தடையினை நிறுத்தி சீரான முறையில் மின்சாரத்தை வழங்குமாறும் , அவ்வாறு வழங்கும் பட்சத்தில் தம்மால் பரீட்சைகள் மீதும் ,உரிய கவனம் செலுத்த கூடியவாறு இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை மின்தடை பற்றி கருத்து தெரிவித்த பெற்றோர் , மாணவர்களின் நிலையினை கருத்தில் கொண்டாவது இந்த பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதிகளிலேன்றாலும் சீரான மின்சார விநியோகத்தை வழங்குமாறும் தெரிவித்தனர்

பெப்ரவரி 17 வரை மின்வெட்டு இல்லை

இதேவேளை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சக்தி, வலுசக்தி அமைச்சு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

இதேவேளை, முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலக்கரி வாங்க இரண்டு வங்கிகளுடன் பேச்சு

மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரி இறக்குமதிக்கு நிதியளிப்பதற்காக இரண்டு அரச வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

அடுத்த மூன்று மாதங்களில் 21 கப்பல்கள் நிலக்கரி இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனவரி வரும் என எதிர்பார்க்கப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 கப்பல்கள் வந்துள்ளது என்றும் மீதமுள்ள இரண்டு கப்பல்கள் இம்மாதத்திற்குள் வரும் என்றும் அவர் கூறினார்.

வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன் வசதிகளின் அளவுக்கேற்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனை கொண்டு குறைந்தளவிலான மின்சார துணிடப்போடு மின்சாரம் வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி