கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில்

மீண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கார் உற்பத்தி நிறுவனங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

குறிப்பாக உற்பத்தி குறைந்ததால் பல நிறுவனங்கள் கார்களுக்கு நல்ல விலையைப் பெற முடிந்தது.

அதை இந்த ஆண்டிலும் தக்கவைத்துக்கொள்வதே தங்களது நோக்கம் என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

இதேவேளை, கடந்த வருட இறுதியில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை வேகமாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டின் இறுதியில் 14 சதவீதமாக அது பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

கார் லீசிங் வசதிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை அதிகரித்துள்ளமை இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முழுமையான செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கம்பஹா மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடுள்ள 75 பேருக்கு சாரதி பயிற்சி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு அது தொடர்பான ஒழுங்குபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் வெற்றியின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 6-8 இலட்சம் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 1, 2023 முதல், வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குவது தொடர்பான பல புதிய முடிவுகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

புள்ளி முறையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் ரத்து வரை நடவடிக்கை. (24 புள்ளிகள் குறைக்கப்பட்டால் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும்)
வாகனப் பதிவின் போது நம்பர் பிளேட்டில் இருந்து மாகாண எழுத்துக்களை அகற்றுதல்
வாகனத்தின் உரிமையை மாற்றும் போது தேவையான படிவத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய அனுமதித்தல்
சஃபாரி வாகனங்களை பதிவு செய்வதற்கான புதிய முறை அறிமுகம்
இலங்கை முழுவதும் உள்ள கேரேஜ்களை தரப்படுத்துதல் மற்றும் பதிவு செய்தல் மூலம் ஒழுங்குபடுத்துதல்
வாகனப் பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்குதல்

 

உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி