ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கே எனக் கூறி கிழக்கு மாகாணத்தில்  மூன்று மொழிகளிலும்

துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள இந்த கையோடு மற்றும் போஸ்டார்களில் உள்ளடங்கியுள்ள விடயம் வருமாறு.

“இன மத பேதமற்ற கிழக்கின் தலைவன் டாக்டர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை மீண்டும் ஆளுனராக்குவோம்.

திறமையும் செயற்றிட்டமும் கொண்ட இனமத பேதமற்ற கிழக்கின் தலைவன் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் ஆளுனராக்கி பாரபட்சமற்ற சமத்துவமான அமைதியான கிழக்கினை கட்டியெழுப்ப முஸ்லிம் வாக்காளர்கள் ஒட்டகச் சின்னத்திற்கும், தமிழ் வாக்காளர்கள் மொட்டுச் சின்னத்திற்கும் வாக்களிப்பீர்களாக!

ஒப்பற்ற தலைவர் கோத்தாபய  ராஜபக்ஷவையும், கிழக்கின் தலைவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வையும் இணைத்து புதிய கிழக்கு விடியும் நாளை

- முஸ்லிம் தமிழ் முற்போக்கு முன்னணி


மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் சுயேட்சை வேட்பாளராக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயாக்கே எனத் தெரிவித்து கிழக்கு மாகாணத்தினுள் ஹிஸ்புல்லாஹ்வினால் துண்டுபிரசுரம் விநியோகித்துள்ளதன் மூலம் கோத்தாபய மற்றும் ஹிஸ்புல்லாஹ்வுக்கிடையில்  செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தெளிவாவதாக Lanka daily செய்தி வெளியிட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரின் ஹிஸ்புல்லாஹ் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கே கிடைக்கும் என அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எஸ்.பி. திசாநாயக்கா கூறியிருந்தார்.  நான் ஹிஸ்புல்லாஹ்வுடன் பேசினேன். ரிசாட் பதியுத்தீனைப் போன்று ஹிஸ்புல்லாஹ் பணத்தைக் கொள்ளையடித்த, குற்றங்களைச் செய்த ஒருவரல்ல.  அவர் வெளிநாட்டிலிருந்து நிதியினைப் பெற்று சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணித்திருக்கின்றார்” என்றும் எஸ். பி. திசாநாயக்கா மேலும் கூறியிருந்தார்.

எஸ்.பி.திசாநாயக்காவின் அந்தக் கருத்து தொடர்பில் தேசிய சுநத்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கருத்து தெரிவிக்கும் போது, “எஸ்.பி. ஊடக சந்திப்புக்கின் போது வாயை மூடிக் கொண்டிருப்பதே அவர் எமது தேர்தல் செயற்பாடுகளுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி