யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக

தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து அன்றைய தினமே இந்தியாவிற்கு திரும்பும்.

ஒரு விமானப் பயணத்தில் 60 பயணிகளுக்கு பல வசதிகளுடன் பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுநாயக்காவுக்கும் சென்னைக்கும் இடையிலான விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டு பயணிகளுக்கும் வசதிகளை விரிவுபடுத்த விமான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி