ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ஷ இது வரையில் அமெரிக்கப் பிரஜையாகவே இருப்பதாகவும் ஜனாதிபதிப்

பதவிக்கு மாத்திரமே அமெரிக்க  பிரஜாவுரிமை அவருக்கு இரண்டாம் பட்சமா ஆவதாகவும்  பெருநகர, மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சிறந்த முகாமைத்துவ பண்பு இருப்பதாக கூறிக்கொள்ளும் கோத்தாபய ராஜபக்ஷ  குறைந்த பட்சம் ஒரு  உள்ளூராட்சி  மன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ உறுப்பினராக  இருந்திருக்கின்றாரா?  

அத்துடன் ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா விமான சேவை  ஆகியவற்றின் பொறுப்பிலிருந்தபோது அந்த நிறுவனங்களை  நட்டத்தில் இயங்கும் நிலைக்கு கொண்டு சென்ற  அவர்  எவ்வாறு  நாட்டை  நிர்வகிப்பார்  எனவும் அவர் கேள்வி  எழுப்பினார்.

பிலியந்தலையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின்  மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி