மினுவாங்கொடை பொல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்,

தற்போது வெளிநாட்டில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்தல பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் 4 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமின் விசேட அதிரடி சோதனை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, போர 12 வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி