டொலர் நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் பணம் செலுத்த முடியாமல் போனதால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளும் தாமதமாகியுள்ளது.

 

கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தி குறித்த நேரத்தில் முடிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் அனைவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

முன்பதிவு செய்யப்பட்ட 03 கிரேன்களை உடனடியாக பெறுவதன் மூலம் துறைமுக அதிகாரசபை வருமானத்தை ஈட்ட முடியும் என இந்த கலந்துரையாடலின் போது பேசப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி