தேர்தல் முறை திருத்தம் என்ற போர்வையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து

தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று (20) கையெழுத்திட்டன. பாராளுமன்றத்தின் குழு இலக்க அறை 7 இல் இது இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, 43 ஆம் படையணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய, இலங்கை சமசமாஜ கட்சி, ஶ்ரீலங்கா கமியூனிடிஸ் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நவ லங்கா நிதஹஸ் பக்ஷய, ஜனநாயக மக்கள் முன்னணி, விஜயதரணி தேசிய சபை, முன்னிலை சோஷலிஸ கட்சி, உத்தர சபா உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் ஜயவர்தனபுரவில் உள்ள MONARCH IMPERIAL இல் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றதோடு, இதில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஏகோபித்த தீர்மானத்தின் படி இந்த கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது.

தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், தனித்தனி கட்சியாகவும், கூட்டாகவும் கடுமையாக எதிர்ப்பது என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, அந்த முடிவின் பிரகாரம், ஒரு பூர்வாங்க நடவடிக்கையாக அறிக்கையில் கையொழுத்திடப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட மக்கள் விடுதலை முன்னணி தனது முழு உடன்பாட்டையும் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக மதத் தலைவர்கள்,சிவில் அமைப்புகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட தரப்பிற்கு தனித்தனியாக தெளிவூட்டுவதற்கும், மக்களுக்குத் தெளிவூட்டுவதற்கும்,அதற்கு அப்பால் இந்த தன்னிச்சையான செயல்முறை குறித்து சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்கவும் நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி