ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் விடயதானங்களைத் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் அமுலக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படிஇ ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆபத்தான மருந்துக் கட்டுப்பாட்டு சபை என்பன பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னதாக, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தொழில்நுட்ப அமைச்சின் கீழும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழும் இருந்தது.

ஆபத்தான மருந்துக் கட்டுப்பாட்டு சபை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்தது.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இருந்த கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் நேற்று முதல் தொழில் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Gazat_2022.10.06.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி