2022 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மொத்தமாக 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதிக்குள் 29 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 64 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குற்றவாளிகள் வசமுள்ள ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி