மினுவாங்கொடை – கமன்கெதர பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் சென்ற சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். 

51 வயதான தந்தை, 23 மற்றும் 24 வயதான அவரது இரு மகன்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி