அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு (23ஆம் திகதி) போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றைய நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 5 வெற்றுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி