பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து இன்றைய தினத்தை அரசாங்கம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, பொது நிர்வாக அமைச்சினால் இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் விசேட அரச விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச நிறுவனங்களில், தேசிய கொடியினை அரை கம்பத்தில் பறக்க விடுமாறும் பொது நிர்வாக அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, தேசிய துக்க தினத்தை முன்னிட்டு, இன்று சகல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி