Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே? சாணக்கியன் கேள்வி!

T

The Leader Desk

மே 8, 2021 • 6:08 AM

இட்டுகம கொரோனா நிதியத்தில் எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே?  சாணக்கியன் கேள்வி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • ஏன் என்றால் எனக்கு 30 வயது.
  • பரிசோதனைகளின் முடிவுகள் ஒருநாளைக்கு 500 முதல் 600 வரையில்தான் கிடைக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
  • சுமார் 10 நாட்களுக்கு பின்னர் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்குமாக இருந்தால், தனிமைப்படுத்தல் என்பதே தேவைப்படாத ஒரு விடயம்.
எழுத்து அளவு:

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “உண்மையில் நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசினை எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தேன். ஏன் என்றால் எனக்கு 30 வயது. என்னை விட தேவை உள்ளவர்கள் கூடுதலாக இருக்கும் போது நான் இந்த தடுப்பூசி எடுப்பது பொறுத்தமில்லை என்று சொல்லி நம்பியிருந்தேன்.

ஆனாலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாகவும் ஒரு அமைச்சர்கள் தங்களுக்கும், தங்களது உறவினர்களுக்கும் வீட்டிற்கே அழைத்து கொரோனா தடுப்பூசியினை எடுக்கிறார்கள் என அறிந்ததன் பின்னர் நானும் இந்த தடுப்பூசியினை எடுப்பது பிழை இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் ஒருநாளைக்கு 500 முதல் 600 வரையில்தான் கிடைக்கக்கூடியதாக காணப்படுகின்றது. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம்தான் இருகின்றது.

சுமார் 10 நாட்களுக்கு பின்னர் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்குமாக இருந்தால், தனிமைப்படுத்தல் என்பதே தேவைப்படாத ஒரு விடயம்.

கொரோனா ஒழிப்புக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை யாரோ ஒருவர் கொள்ளையடிக்கின்றனரா என்ற சந்தேகம் கூட எங்களுக்குள் காணப்படுகின்றது. இது மாபியாவாக வருமானம் உழைப்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு விடயமா என்ற சந்தேகம் கூட இருக்கின்றது.

இதுவொரு இனத்துவேசமான அரசாங்கம், அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு 45 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கொரோனா நிலையம் ஒன்றினை வழங்கியுள்ளனர். ஆனால் அது இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

இட்டுகம கொரோனா நிதியத்திற்கு இலங்கையிலுள்ள அதிகளவான நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என நிதியினை வழங்கியுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரின் அறிக்கையின்படி ஜனவரி 31ஆம் திகதியளவில் கொரோனா நிதியத்தில் ஆயிரத்து 720 மில்லியன் ரூபாய் பணத்தில் ஆறு வீதமான பணம்தான் செலவிடப்பட்டுள்ளது.

ஆகவே எஞ்சியுள்ள ஆயிரத்து 600 மில்லியன் ரூபாய் நிதி எங்கே?“ எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...