ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ வரை பயணித்த நகரங்களுக்கிடையிலான அதிவேக ரயில், நேற்றிரவு, கொள்ளுப்பிட்டிக்கு அருகில் ரயில் நிலையத்திற்குத் திரும்பும் போது தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் பாதை பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலை மீண்டும் தண்டவாளத்திற்குள் உள்வாங்குவதற்கான பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், கரையோர ரயில் சேவைகள் தாமதமடையலாம் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி