Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 58 பேர் பலி!

T

The Leader Desk

ஜூலை 14, 2021 • 1:59 PM

ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 58 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றால் ஈராக்கின் சுகாதார கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
  • இந்த நிலையில் ஈராக்கின் தென்கிழக்கு பகுதியில் நசிரியா நகரில் உள்ள அல் உசேன் என்கிற ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு திறக்கப்பட்டது.
  • இந்த வார்டில் கொரோனா நோயாளிகள் 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
  • எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 58 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எழுத்து அளவு:

பல ஆண்டுகால உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றால் ஈராக்கின் சுகாதார கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஈராக்கின் தென்கிழக்கு பகுதியில் நசிரியா நகரில் உள்ள அல் உசேன் என்கிற ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு திறக்கப்பட்டது.

இந்த வார்டில் கொரோனா நோயாளிகள் 63 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அல் உசேன் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ சற்று நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதிலும் பரவியது.

இதனால் செய்வதறியாது திகைத்த நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 58 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதிகாரிகளின் அலட்சிய போக்கே விபத்துக்கு காரணம் என கூறி ஆஸ்பத்திரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்களை தீவைத்து எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இந்த தீ விபத்து தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதமர் அல் காதிமி, ஆஸ்பத்திரியின் தலைமை நிர்வாகி, மாகாண சுகாதார இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரதமரின் உத்தரவின் பேரில் இந்த தீ விபத்து குறித்து அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

ஈராக்கில் இந்த ஆண்டு கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட 2-வது மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும். கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அரசு அல் காதீப் என்கிற கொரோனா ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 82 நோயாளிகள் உடல் கருகி பலியானது நினைவுகூரத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து 58 பேர் பலி! | Tamil Leader | We Lead the Nation