போதியளவு டீசல் கிடைக்காவிட்டால், நாளை மறுதினம் முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


டீசல் இன்மையால், இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கையை 20 சதவீதமாக மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாலைகள் மூலம், தனியார் பேருந்துகளுக்கு டீசலை விநியோகிப்பதும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி