மின்சார சபையின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படவுள்ளது.அவ்வாறே, அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தை கூட்டு நீர் வழங்கல் திட்டத்திலும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மேற்படி பிரதேசங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் வியாழக்கிழமை (9) காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை 13 மணித்தியாலங்களுக்கு நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை (வடக்கு - தெற்கு), கட்டுகுருந்த, நாகொட, போம்புகல, பிலமினாவத்த, பயாகல, மக்கொன, பேருவளை, மொரகல்ல அளுத்கம, தர்கா நகரம், பெந்தோட்ட மற்றும் கலுவாமோதர ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்