அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதாரத்துறையில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று  முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொவிட் தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

உலக சந்தையில் மருந்துப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், உள்நாட்டில் மருந்து உற்பத்தியை துரிதப்படுத்தி, தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹொரணையில் உள்ள ஒயாமடுவ மற்றும் மில்லேவ பிரதேசங்களை மையமாக கொண்டு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி