Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இந்தியாவில் கண்டறியபட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் காணப்படுகிறது! உலக சுகாதார அமைப்பு

T

The Leader Desk

மே 27, 2021 • 1:13 PM

இந்தியாவில் கண்டறியபட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் காணப்படுகிறது! உலக சுகாதார அமைப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது.
  • உலகளவில் புதிதாக 41 லட்சம்பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
  • தொற்றில் 14 சதவீதமும், உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
எழுத்து அளவு:

கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது. உலகளவில் புதிதாக 41 லட்சம்பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தொற்றில் 14 சதவீதமும், உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன.

பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பி.1.617 வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வகை வரைஸ் அதிகமாகப் பரவும் சக்தி கொண்டதாகவும், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும், மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது போன்றவை குறித்து தீவிர ஆய்வில் இருந்து வருகிறது.

கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர் இது 23 சதவீதம் குறைவாகும். பிரேசிலில் 4.51 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர் இது 3 சதவீதம் குறைவாகும். அர்ஜென்டினா (213,046 - 41 சதவீதம் வரை), அமெரிக்கா (188,410 - 20 சதவீதம் குறைந்து), கொலம்பியா (107,590 - 7 சதவீதம் குறைவாகும்.

ஆர்ஜென்டினாவில் 2.13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் இது 41 சதவீதம் அதிகம், அமெரிக்காவில் 1.88 லட்சம் பாதிக்கப்பட்டனர் 20 சதவீதம் குறைவாகும், கொலம்பியாவில் 1.07 லட்சம் தொற்று ஏற்பட்டது.

அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தால் பதிவான பாதிப்புகளின்  எண்ணிக்கை முந்தைய வாரத்தில் பதிவான பாதிப்புகளை போலவே இருந்தது.

ஐரோப்பிய பிராந்தியத்தில் கடந்த ஏழு நாட்களில் புதிய பாதிப்புகளில்  மற்றும் இறப்புகளில் மிகப்பெரிய சரிவைக் கண்டது, அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா பிராந்தியமும் உள்ளது.

உலகளவில் கடந்த 4 வாரங்களாக கொரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது, ஆனால், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, பல நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த வாரத்தில் 28,292 பேர் உயிரிழந்தனர். 10 லட்சம் பேருக்கு 2.1 பேர் உயிரிழந்தனர். இது 4 சதவீதம் அதிகமாகும். நேபாளில் 1,297 பேர் உயிரிழந்தனர், 4.5 சதவீதம் அதிகம், இந்தோனேசியாவில் 1,238 பேர் உயிரிழந்தனர், 10 சதவீதம் அதிகமாகும்

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்தியாவில் கண்டறியபட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் காணப்படுகிறது! உலக சுகாதார அமைப்பு | Tamil Leader | We Lead the Nation