மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என அரசாங்கத்தின் இரண்டு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொட்டு கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யு. கே. சுமித் உடுகும்புர ஆகியோரே இவ்வாறான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால், மொட்டு  கட்சியின் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக குறித்த இருவரும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, பிரதமரின் இராஜினாமாவின் பின்னர் உருவாக்கப்படவுள்ள உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தை தீர்மானிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட்டமொன்றை கூட்டியுள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அரசாங்கம் மற்றும் சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் எதிர்வரும் 29ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடலை நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் இராஜினாமாவின் பின்னர் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வகட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு, அதற்கான கால அவகாசம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி கூடி கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், பிரதமர் பதவி விலக போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 

இடைக்கால அரசாங்கத்திலும் தாமே பிரதமராக செயற்பட போவதாகவும் அவர் கூறியிருந்தார்.இதேவேளை, நாட்டை அராஜகமாக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானங்களை எதிர்கொள்ளத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 26ஆம் திகதி பிற்பகல் அலரிமாளிகையில் வணக்கத்துக்குறிய ஓமல்பே சோபித தேரர் மற்றும் மகா சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி