இன்று ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டத்தின் முக்கியமான ஒரு தினமாகும். யார் எதைச் சொன்னாலும் இந்த போராட்டம் நாட்டிற்கு சாதகமான ஒன்று.

இதன் மூலமாக ஏற்படுவது சமூக அபிவிருத்திக்கான சாதகமான நிபந்தனைகள் உருவாகும். இதுவரை இந்த போராட்டம் நாட்டுக்கு ஏற்படுத்தக் கூடிய அழுத்தங்களை பார்க்கின்ற பொழுது அது உண்மையிலேயே பாரியளவில் உள்ளது.

 விசேஷமாக ராஜபக்சக்கள், ராஜபக்சக்களது சகாக்ககளுக்கு இது ஒரு பாரிய தாக்குதல் ஆகும். அதே போன்று எமது நாட்டில் எதிர்க்கட்சிக்கு ஆரம்பம் தொட்டே இதனை விளங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது. தற்பொழுது ராஜபக்சக்கள் வழி நடத்தலை ஆரம்பித்து உள்ளார்கள். 

அவர்கள் தற்போது பேஸ்புக் கம்பெய்ன் ஒன்றை பெரிய அளவில் செய்கின்றார்கள். இந்த புத்தாண்டு காலத்தில் இருக்கக்கூடிய மக்களுடைய மனநிலையை நன்கு பயன்படுத்தி பிரயோசனம் அடைகின்றார்கள். இந்தப் போராட்டம் நாட்டினுடைய அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றது. 

இதன் மூலம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைகின்றது.  இது சிங்கள பௌத்தத்திற்கு எதிரான ஒரு சூழ்ச்சி என்று புதிய பிரபஞ்ச கதையொன்றை குறிப்பிடுகின்றார்கள்.ரட்டே ரால குறிப்பிடுவது இந்தப் போராட்டம் எமது நாட்டினுடைய அரசியலில் ஒரு திருப்புமுனையாகும். 

இந்த நாட்டில் உள்ள கடல் கன்னி அரசியல் கலாசாரத்துக்கு பாரிய ஒரு சவாலாக இது அமைந்துள்ளது. உண்மையில் இந்தப் போராட்டமானது நாட்டுக்கு சாதகமான அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று இந்த போராட்டத்திற்கு மக்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்றுள்ளது. 

அதனால் தான் இன்று இந்த போராட்டம் இன்னும் நல்ல திசையை நோக்கி நோக்கி செல்கின்றது. அதே போன்றுதான் இந்த போராட்டத்திற்கு எதிராக சூழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. அவற்றின் மூலமாக இந்த போராட்டத்தை பாதுகாக்க வேண்டியது இந்த நாட்டில் ஒவ்வொரு பிரஜையினதும்  பொறுப்பாகும். 

அது மாத்திரமல்ல இந்த போராட்டத்தை கைவிடுவதற்கு தயாரான எதிர்க்கட்சி தற்போது  போராட்டத்தின் முன்னே காலில் மண்டி இடும் நிலைக்கு வந்துள்ளார்கள். அவருடைய அரசியல் வகிபாகம் தொடர்பில் இன்று மக்கள் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். 

வெவ்வேறாக கனவு மாளிகைகளை ஏற்படுத்தி அதனுள்ளே வாழ்ந்த எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் அந்த கனவு மாளிகைகள் உடைக்கப்பட்டு விட்டது. அந்த மாற்றம் நேற்றுவரை  மிகவும் தெளிவாக அவதானிக்க கூடியதாக இருந்தது. தற்போது எதிர்க்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைச்சாத்திட உள்ளதாம். அது ஒரு நல்ல ஒரு விடயம். 

இருப்பினும் அதனை வெற்றியில் முடிவு செய்ய வேண்டும். அது  பிழைத்ததாக அமைந்து விட்டது என்று குறிப்பிட வேண்டாம். தற்பொழுது ஜேவிபியும் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் இடுவதாக குறிப்பிட்டுள்ளது. அதுவும் இவ்வளவு காலமும் இந்த அரசியல் யாப்பின் உள்ளே இந்த பிரச்சனைக்கு பதில் இல்லை என்று குறிப்பிட்ட ஜேவிபி தற்போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கதைப்பதற்கு இணக்கம் என தெரிவித்துள்ளது.

 3ஆம் திகதி வெளியே வர வேண்டாம் என்று கூறிய ஜேவிபி போராட்டத்திற்கு முன்னால் மண்டியடித்து விட்டது.  தற்பொழுது ஜேவிபியும் வீதிக்கு இறங்கி உள்ளது. போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. அது ஒரு நல்ல விடயம். ஐக்கிய மக்கள் சக்தி, 43 படையணி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் அரச சேவை இவையாவும் போராட்டத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

கோட்டாபய பதவி விலகியதன் பின்னர் தீர்வு பற்றி கதைப்போம்  என்று குறிப்பிட்ட ஜேவிபி தனது  நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.இன்னமும் ஜேவிபி குறிப்பிடாமல் இருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற விடயத்தை மாத்திரமே. அந்த இடத்திற்கும் அவர்களர வர வேண்டிய நிலை ஏற்படும். அதனால் இந்தப் போராட்டத்தின் மூலம் ஜேவிபியின் அடிப்படைவாத நிலைப்பாடுகள்கூட சவாலுக்கு உற்படுத்தப்பட்டிருக்கின்றது.

 அதேபோன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை தோளில் வைத்துக் கொண்டு சென்ற சஜித்திற்கும் போராட்டத்தின் முன் தனது  நிலைப்பாட்டில் மாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு வேண்டும் என்ற நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்படுத்தப்பட்டுள்ளது. 

அது பாராட்ட வேண்டிய ஒரு செயற்பாடாகும். உண்மையில் சஜித் ஆரம்பத்தில் இருந்த நிலைப்பாட்டில் இன்னும் இருக்க முடியாதவராக இருக்கிறார். அவரை முடியாமல் செய்து உள்ளனர்.தாம் மக்களுடைய ஆணைக்கு புறம்பாக  அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த  தயார் இல்லை என குறிப்பிட்ட சஜித் இன்னும் அந்த கதையில் நிலைக்க முடியாதவராக உள்ளார்.சஜித்திற்கு மக்கள் ஆணை  வருகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாடு அழிவடைந்து முடிவடைந்து விடும்.

 எனவே அதுவரை இந்த நாட்டை இவ்வாறு செல்வதற்கு அனுமதிப்பதா என்ற ஒரு பிரச்சினை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ராஜபக்சக்கள் போகவில்லை என்றால் அடுத்ததாக என்ன மாற்று வழியை ஏற்படுத்துவதே. அதற்குரிய தலைமை வகிக்க முடியாதவரை ராஜபக்சக்களுடனே அனுப்பி வைத்தல் வேண்டும்.

 சஜித்துக்கு முடியாது என்றால் நாங்கள் செய்வோம் என்ற குரல் தற்போது  ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளே இருக்கக்கூடியவர்கள் மூலம் எழுப்பப்படுகின்றது. ஹரீன், மனுச,பாட்டலி, ஹர்ச,  பொன்சேகா மூலம் ஏற்படுவது அந்த குரல்கள். 

அது மாத்திரமல்ல அரசாங்கத்தின் உள்ளே இன்னும்   ராஜபக்சே எதிர்ப்பு நிலையில் உள்ளவர்களுக்கு,  சுயாதீனமாக செயற்படுகின்றோம் என்று குறிப்பிட்டவர்களுக்கு இந்த மக்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு முடியாத ஒரு நிலைக்கு வந்துள்ளார்கள்சிறிய கட்சிகள் 10, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அனுர பிரியதர்சன யாபா அணியினர் அதேபோன்று விஜயதாஸ ராஜபக்ஷ கூறிய இடைக்கால அரசாங்கத்தை கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதம் எழுதினால் மாத்திரம் சரிவராது.

 இடைக்கால அரசாங்கத்தை கைகூப்பி கேட்க ஒன்றுமல்ல. பாராளுமன்றத்திற்கு முடியுமாக இருக்கின்றது அவ்வாறான ஒரு வியூகத்தை ஏற்படுத்துவதற்கு. அவர்கள் மேற்கொள்வது ராஜபக்ஷக்கள் இருக்கக்கூடிய இன்னொரு முறையை ஏற்படுத்துவதற்கு.  ராஜபக்ஷக்களை விரட்டி அடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் யாப்பில் காணப்படுகின்றன. தற்போது அரசாங்கத்தை இருக்கக்கூடிய உறுப்பினர்கள் கூட மீளவுமல  அரசாங்கத்தினுடைய அழுத்தத்திற்கு கீழ்படிந்து செல்லக்கூடிய நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

விசேடமாக அந்த சுயாதீனமான அணி. மக்கள் போராட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட எழுச்சியை இந்த அரசாங்கம் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வழங்குவது எதிர்க்கட்சி. ரட்டே ரால பொறுப்புடன் குறிப்பிடுகின்றார் எதிர்க்கட்சி போராட்டத்தை தாரைவார்த்து விட்டது என்று. இந்த நிலைக்கு முன் மக்கள் போராட்டத்தை போராட்டத்திற்கு வழங்கப்படுகின்ற விசேஷமான பொறுப்பொன்று இருக்கின்றது. 

அது தான் குறைந்தபட்சம் அரசாங்கம் பதவி விலகச் செய்ய அல்லது அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து அரசாங்கம் தோல்வியடைய செய்கின்றவாறு பாராளுமன்றத்தை வழிநடத்தல் வேண்டும். அதனை செய்வதற்கு பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கத்தை கட்டாயம் தோல்வியடைவதற்கு  ஒரு சாதக தன்மை ஏற்படுத்த வேண்டும்.

 அதனை மேற்கொள்ள எதிர்க்கட்சிக்கு முடியாது. அதனை செய்ய முடியும் மக்கள் போராட்டத்திற்கு. அரசாங்கத்தினுடைய உறுப்பினர்கள் ஒன்று நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பாக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும். இல்லை என்றால் அன்றைய தினம் வருகை தராமல் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் அவர்களுக்கு சுகயீனம் ஏற்பட வேண்டும்.

அதனை செய்ய முடியும் மக்கள் போராட்டத்திற்கு. அவ்வாறு அழுத்தத்தை செய்ய முடியுமாக இருப்பது அந்த மக்கள் போராட்டத்திற்கு.  அரசாங்கத்துக்கு கையை உயர்த்தியவர்கள் கிராமங்களுக்கு வரவேண்டாம் என்று  குறிப்பிட முடியும் அந்த மக்கள் போராட்டத்திற்கு, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க அவர்களது வீடுகளை சூழ்ந்து இருக்கக்கூடிய நிலவரம் அந்த மக்கள் போராட்டத்துக்கு முடியும். அதற்கு முன்னர் நீங்கள் போங்கள் என்று ராஜபக்ஷக்களுக்கு குறிப்பிடக்கூடிய இயலுமை இருப்பது மக்கள் போராட்டத்திற்கு. எதிர்க்கட்சியை விட நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றியடையச் செய்வதற்கு மக்கள் போராட்டத்திற்கு முடியுமாக உள்ளது. இந்த இடத்தில் இன்னொரு விடயம் உள்ளது.

 ராஜபக்சக்களை விரட்டியடிக்க வேண்டும் இருப்பினும் அவர்கள் மேற்கொண்ட அழிவுகளில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இந்த இரண்டு  விடயங்களும் ஒன்றாக நடைபெறுதல் வேண்டும். உண்மையில் ராஜபக்சக்கள் இருப்பது மிக பயத்துடன். அவர்களுக்கு தெரியும் வேலை பிழைத்துவிட்டது என்று. 

எவ்வளவு பிழைத்துள்ளது என்று சொன்னால் தற்பொழுது அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறியும் தப்பித்துக் கொள்ள முடியாது. பார்த்தீர்கள் தானே ராஜபக்சவின்  இரத்த உறவாகிய ஜாலிய விக்கிரமசூரியவுக்கு நடைபெற்றதை. உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பாய்ந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு சிறிய அளவில் சரி சலுகை காணப்படுவது அவர்கள் தங்களுடைய பணங்களை வைத்திருக்கின்ற ஆபிரிக்க நாடுகளுக்கு பாய்ந்தால்தான். இறுதியில் சுவாசிலாந்து தான் இருப்பது. அந்த நாடும் உறுதிபடக் கூறிவிட முடியாது.

 ராஜபக்சக்கள் கள்வர்கள் என்று தற்பொழுது உலகமே தெரிந்து முடிந்து விட்டது. அதனால் ராஜபக்சக்கள் மேற்கொள்வது தங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கக்கூடிய வியூகம் ஒன்றை இங்கே ஏற்படுத்துவதற்கு. அவ்வாறு செய்தால் தற்காலிகமாக சரி பாதுகாப்பு கிடைக்கும். உண்மையில் அதற்கு உதவி செய்வது எதிர்க்கட்சியின் உடைய ஒரு முக்கியமான நபர் ஒருவர். 

சந்தர்ப்பம் வருகின்ற போது அவற்றை எல்லாம் குறிப்பிடுகின்றோம். அடுத்ததாக சிறிய கட்சி கூட்டணி இருப்பதும் இன்னும் ஒரு நிலையில்தான். தற்போது குறிப்பிடுவது அதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாம  என்று மாத்திரம் தான். உண்மையில் எதிர்க்கட்சி போராட்டத்தை தாரைவார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஏற்படுத்துவது ராஜபக்சக்கள் இருக்கக்கூடிய அரசாங்கத்தையே. எதிர்க்கட்சி இந்த பொறுப்பை எடுப்பதற்கு பயப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் சஜித் போன்று அனுரவும்  பயப்படுகின்றார். 

அதனால் இந்த நாட்டில் ஏற்படப்போகும் பாரிய அழிவுக்கு  இவர்களே பொறுப்புக்கூற வேண்டும். பாரிய அழிவு என்று ரட்டே ரால குறிப்பிடுவது கொலை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல.  மே, ஜூன் மாதம் வருகின்ற போது இந்த நாட்டில் அதிகமான மக்கள் இறப்பது உணவில்லாமல் அல்ல மருந்து இல்லாமல். சாப்பிட உணவு இல்லாமல் சாவது அல்ல.  சாப்பிட முடியாமல் வயிறு ஊதி மந்த போசனை உள்ள பிள்ளைகள் எல்லாவிடத்திலும் இருப்பார்கள்.முடியுமாக இருந்தால் ராஜபக்சக்கள் மாத்திரமல்ல இந்த நாட்டை அழிவுக்கு உட்படுத்த ஒத்துழைப்பு வழங்கி அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். 

அவர்களுக்கு தண்டனை வழங்குதல் வேண்டும். அதனை ரட்டே ராலவுக்கு செய்யக்கூடிய வேலை அல்ல. அதனை இந்த நாட்டினுடைய மக்கள் செய்ய வேண்டும். தண்டனை வழங்குவது எவ்வாறு இருப்பினும் குறைந்தபட்சம் அவர்கள் இங்கே இருக்கக்கூடிய அதிகாரத்தையாவது இல்லாது செய்ய வேண்டும். அந்த இடத்தில் ராஜபக்சக்கள் மாத்திரமல்ல இந்த நாட்டை அழிவுக்கு இழுத்துச்சென்ற  பிபி ஜெயசுந்தர,கப்ரால், ஆட்டிகல உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் செய்த மீள திருப்பிவிடுவது அவ்வளவு இலேசான விடயம் அல்ல. விசேடமாக பிபி ஜெயசுந்தர மேற்கொண்ட அழிவு மிகப் பயங்கரமானது.

 ஜூன் மாதமளவில் மருந்தின்றி இறக்கக்கூடிய ஒவ்வொருவரையும் கட்டியணைத்து அழுகின்ற மக்களுடைய சாபம் பிபிக்கு நேரடியாக தாக்கும்.பிபி என்பவர் மேற்கத்தேயத்திற்காக சேவையாற்றிய மிலேட்சத்தனமான பொருளாதாரத்தை நாசம் செய்தவர்.கப்ராலும் அந்நிலைக்கு விருத்தியடைந்து வந்த ஒரு கள்வன். உண்மையில் இந்த மக்கள் போராட்டத்தின் மூலம்தான  கப்ரால் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டார். 

இல்லை என்றால் அடுத்து பிபி என்று குறிப்பிடுவது கப்ரால் தான். அதனால் இந்த தேசத்துரோக  ஆட்சியாளர்களை போன்று தேசத்துரோக அதிகாரிகளையும் வெளியேற்ற வேண்டும். அந்த இடத்துக்கு நாட்டினுடைய அன்பைப் பெற்ற நபர்களை நியமிக்க வேண்டும். அவர்களுடைய போராட்டம் மூலம் நாட்டிலே விழிப்புணர்வு பெற்ற மக்கள் குழு இருக்கின்றது. இந்த இடத்தில் கிடைக்கப்பெற்றது அதிகமான வெற்றிதான் எங்களுடைய நாடு மீது அன்பு செலுத்துகின்ற மக்கள் எழுச்சி பெற்ற விடயம். அந்த இடத்திலேயே விசேடமாக நிபுணத்துவம் பெற்ற பலர் இருக்கின்றார்கள். 

மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடலை அவர்கள் மேற்கொள்கின்றார்கள். மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் அவர்கள் அவற்றுக்கு தயாராக இருக்கின்றார்கள்.அவர்கள் இந்த அரசியலில் உண்மையில் கசப்பான நிலையிலேயே  இருந்தார்கள். இருப்பினும் இந்த நாட்டினுடைய இளைஞர்களுடைய எழுச்சி அந்த நபர்களை இது தொடர்பில் மீள நினைப்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. 

எங்களுடைய நாட்டை மீள கட்டி எழுப்புவதாயின் அந்த புத்திக் கூர்மைத்தன்மை அவர்களிடம் உண்டு. அதனை நாங்கள் இணைத்துக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால் நம்பிக்கையில்லாப் பிரேரனை மூலமாக ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்பினாலும் மீள அதிகாரத்தை அவ்வாறான ஒரு கூட்டம். அதனால் இரவில் விழுந்த பள்ளத்தில்  நாம் பகலில் விழ முடியும். அதற்கு நாங்கள் இடம் வழங்காமல் ரட்டே ரால குறிப்பிடுகின்ற இந்த அறிஞர்கள் குழுவினர் மூலமாக உரிய வேலைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

 அடுத்ததாக உங்களுடைய ப்போராட்டத்தின் பிரதான கருத்தாக அமைந்தது gota go home  என்பதுதான்.ரட்டே ரால குறிப்பிடுவது கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப கூடியதாக இருக்கும். இருப்பினும் அவற்றுக்கு அனுப்பக்கூடிய ஒரு முறை ஒன்று இருக்கின்றது. அது தான் ஜனாதிபதி கதிரையோடு சேர்த்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.அவ்வாறான ஒரு தலைவர் உருவாகும் இடத்தை தவிடு பொடியாக்கல் வேண்டும். அந்த இடத்திற்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். அது ஒரு நீண்ட கால வேலைத் திட்டமாகும். 

அந் நிலைக்கு  வரும்வரை கோட்டாபயவின் நிலையை கழற்றி எடுத்திர வேண்டும்.அதனை 20 ஐ ஒழித்தல் மூலம் மேற்கொள்ள முடியும். அதை பாராளுமன்றத்தில் ஒரு கிழமையில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். அடுத்ததாக நீங்கள் கேட்க வேண்டியது இன்னும் ஒரு புதிய வரவு செலவுத் திட்டத்தை வேண்டலே ஆகும்.எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் முன்னுரிமை வழங்கக்கூடிய  வரவு-செலவுத்திட்டம் அமைந்திருக்க வேண்டும்.

 இன்னும் ஒரு அத்தியாவசிய கோரிக்கைதான் இந்த நாட்டில் இவர்கள் கொள்ளையடித்த அனைத்து சொத்துக்களையும் மீள பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எங்களுடைய நீதி கட்டமைப்பில் மறு சீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த அனைத்தையும் செய்ய போராட்டத்தை பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும். தற்பொழுது  இந்த போராட்டத்தை அழிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. 

அதேபோன்று போராட்டத்தினிடையே சிலர் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி மேற்கொள்வதற்கு  பாடுபடுகிறார்கள். தற்பொழுது போராட்டத்தை வழி நடத்த வேண்டும் தங்களுடைய அருகில் உள்ள நிழலும் எதிரி என்ற அடிப்படையில் நினைத்துக்கொண்டுதான். அதே போன்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்  தாம் கட்சி சார்பற்றவர் என்ற விடயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 அடுத்ததாக தற்போது போராட்டக்காரர்கள் தங்களுடைய முன்மொழிவுகளை சமூக மயப்படுத்த வேண்டும்.ரட்டே ரால இந்த நாட்டினுடைய மக்களிடம் வேண்டிக் கொள்வது மீண்டும் ஒரு தடவை தாரை வார்த்த போராட்டம் என்றவாறு ஏப்ரல் 3ஆம் திகதி மக்கள் போராட்டத்தை வரலாற்றிலேயே  இடம்பெறச் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என்று.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்.

கடவுள் துணை வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி