இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தள்ள அதேவேளை, இன்றும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பில் மாபெறும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இன்று காலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஒன்று திரண்ட மக்கள் கொழும்பு காலிமுகத்திடல் பகுதிக்கு எதிர்ப்புப் பேரணியாக வருகை தந்தனர்.

 

சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலக பகுதியை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை முழுவதும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் கேட்கக்கூடிய அளவிற்கு மிகவும் வலுவானதாக இருக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பொறுமை இழந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இந்த போராட்டங்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச அதிகரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி