பாராளுமன்றில், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை குறித்து இன்றும், நாளையும் இருநாள் விவாதம் இடம்பெறவுள்ளது.


அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில் பாராளுமன்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளதையடுத்து கட்சி தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு ஒருவார காலத்திற்குள் தீர்வு காணும் வகையில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என கட்சி தலைவர் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார உட்பட கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 08 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதன் போது வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரிவிப்பது சட்டபூர்வமானதல்ல எனவும் தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தான் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பதன் மூலம் அவ்வாறு விலகியதாக கருதமுடியாது எனவும் என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் செவ்வாய்க்கிழமை (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி