வெற்றிடமாகவுள்ள சமகி ஜன்பலவேகவின்

தேசியப் பட்டியல் பதவிக்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமகி ஜனபலவேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் நேற்று (08 ) முதல் நீக்கப்பட்டுள்ளது.
 

>இதன் காரணமாக பாராளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

 

வெற்றிடமாகவுள்ள உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெயரை முன்மொழிந்து அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதன்படி, குறித்த தரப்பினரால் பெயர் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறித்த பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்ததன் பின்னர், பெயர் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி