341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலா 100 இலட்சம் வீதம் ஒதுக்கும் பணத்தை,

கல்வி அமைச்சின் ஊடாக, அதில்  மில்லியனில் 3410  ரூபாவில் பாடசாலைகளில்  திறன் வகுப்பறைகளை நிறுவ முடியும். இத்தகைய முக்கியமானதொரு திட்டத்ததுக்கு  செல்வது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க காரணமாக அமையும். இந்த பணிக்கு குறித்த பணம் பயன்படுத்தப்படுமாக இருந்தால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிதியாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலா 100 இலட்சம் வீதம் ஒதுக்கும் பணத்தை, கல்வி அமைச்சின் ஊடாக, அதில்  மில்லியனில் 3410  ரூபாவில் பாடசாலைகளில்  திறன் வகுப்பறைகளை நிறுவ முடியும். இத்தகைய முக்கியமானதொரு திட்டத்ததுக்கு  செல்வது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க காரணமாக அமையும். இந்த பணிக்கு குறித்த பணம் பயன்படுத்தப்படுமாக இருந்தால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிதியாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உணவை சகல பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும். பாகுபாடின்றி கொடுக்க வேண்டும். இது பிள்ளைகளின் களின் மன நிலையை பாதிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று (09)  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.பாடசாலை மாணவிகளுக்கு ஆரோக்கியத் துவாய் வசதிகள் எப்போது வழங்கப்படும்?

பெண் பிள்ளைகளின் ஆரோக்கியத் துவாய் விடயத்தில் அரசாங்கம் செயற்படுத்தவுள்ள திட்டத்தை ஒட்டுமொத்த பெண்களையும் இலக்காக் கொண்டு செயற்படுத்த வேண்டும். என்ன திகதியில் மாணவிகளுக்கு ஆரோக்கியத் துவாய் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும். நாட்டில் இலவசக் கல்வி முறை இருந்தாலும், இந்நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான உயர் தரத்துடன் கூடிய கற்றல் செயற்பாட்டுக்கான வாய்ப்பு இங்கு இல்லை. இந்நாட்டின் கல்வி முறை முழுமையாக சீர்திருத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச தேசிய கல்விக் கொள்கையில் 10 வருடங்களுக்குள் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முன்மொழிவுகள் சரியானதாக இருந்தால், குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடுத்த 2-3 ஆண்டுகளில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.உலகில் எதிர்வரும் காலங்களில் உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வகையில் தேசிய கல்வி எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டிருந்தால், அது குறித்து அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அவ்வாறே பாடசாலைகளில் நிலவும் மனிதவள மற்றும் பௌதீக வள பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் யாது என்றும் கேள்வி எழுப்பினார்.மருத்துவ நிபுணர்களின் கூற்றுப் பிரகாரம் பெரும்பாலான குழந்தைகளின் 70% மூளை வளர்ச்சி பிறப்பு முதல் ஐந்து வரையில் என சுட்டிக்காட்டியுள்ளனர். நம் நாட்டில் பாலர் கல்வி முறையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கும், தரக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டதாக அமைய வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

2023 இல் உலகை வென்ற பல புதிய தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. நமது நாட்டில் இலவசக் கல்வி முறையில், கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கு இந்தப் புதிய தொழில்நுட்ப அறிவு இல்லாத நிலையே காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 
Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி