தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ  நிலத்தின் மண்ணை உண்டு கூறினாலும், தலையின் மீது இரண்டு கைகளை
வைத்து சத்தியமிட்டுச் சொன்னாலும் அவரது அமெரிக்காவின் பிரஜா உரிமை நீக்கப்பட்டு விட்டது என்பதற்கான சட்டரீதியான ஆவணங்கள் அவரிடமில்லை என “Lankaenews.com” இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவருக்கு எதிராக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க மற்றும் ரோசி சமந்தானம் கலிபோனியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதை ஒத்தி வைக்குமாறு கோத்தாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் மூலம் சமர்ப்பித்த மோசம் மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை செய்யப்படும் விதங்களின் பிரகாரம் முறைப்பாட்டுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு கூட்டாக வழங்க வேண்டிய வாக்குமூலத்திற்கு அமைய இவ்விடயம் தெளிவாகுவதாக Lankaenews.com இணையத்தளம் சுட்டிக் காட்டியுள்ளது.

Lankaenews.com இணையத்தளச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கோத்தாவின் மெஜிக் சான்றிதழ் அமெரிக்காவிற்கும் மறைக்கப்பட்டுள்ளது!

அந்த ஆவணங்களில் எவ்விடத்திலும் கோத்தபாய ராஜபகஷவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டுவிட்டது  என குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக கோத்தாபய தனது அமெரிக்க குடியுரிமையினை நீக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்ல பிரதிவாதியான கோத்தாபயவின் சட்டத்தரணிகள் மற்றும் முறைப்பாட்டாளர்களின் சட்டத்தரணிகள் கையொப்பத்துடன் சமர்ப்பித்துள்ள கூட்டு வாக்குமூலத்தில் ஜூன் 30ம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க பெடரல் வருமான வரி பதிவாளரின் குடியுரிமையினை நீக்கிக் கொண்டவர்களின் பெயர் பட்டியலில் கோத்தாபயவின் பெயர் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியாயின் கோத்தாபய தனது குடியுரிமையினை இன்னமும் சட்ட ரீதியாக நீக்கிக் கொள்ளவில்லை என அமெரிக்க நீதிமன்றத்தின் முன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவர் இந்த கூட்டு வாக்குமூலத்தை கலிபோனியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி வழங்கியுள்ளார். கூட்டு வாக்குமூலத்தில் கோத்தாபயவின் சட்டத்தரணியான ஆர்னல்ட் என்ட் போட்டர் சட்ட நிறுவனத்தின்  ஜோன் சீ உலின் என்பவரே கையொப்பமிட்டுள்ளார்.  (அந்த கூட்டு வாக்குமூலத்தின் பிரதி கீழே தரப்பட்டுள்ளது)

கோத்தாபயின மோசத்தின் மூலம் வெளியாகும் ஏனைய விடயங்கள்

அஹிம்சா மற்றும் ரோய் தாக்கல் செய்துள்ள இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்வதை ஒத்திவைக்குமாறு கோத்தாபயவின் சட்டத்தரணிகள் புதுமையான காரணங்களைக் காட்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, தான் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும், அதில் வெற்றியீட்டுவது உறுதியானது என்பதால் அப்போது அரச தலைவர் ஒருவருக்கு உரித்தான விதிவிலக்குகள்  (head-of-state immunity) தனக்கும் உரித்தாவதால் வழக்குகளை எதிர்காலத்தில் விசாரிப்பதில் பயனில்லை எனக் கூறி தற்போதே வழக்கு விசாரணைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கோத்தாபய கலிபோர்னியா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மோசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அஹிம்சாவின் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோத்தாவின் மோசத்தை மாத்திரம் இதன் இறுதியில் காணப்படுவதோடு, ஏனையவைகளும் அதற்கு சமமானதாகும்)

அதாவது. கோத்தாபய இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வெற்றி பெற்றுவிட்டார்.  ஹெட் ஓப் ஸ்டேட்டாகவும் ஆகிவிட்டார்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகின்றது. கோட்டா மக்கள் பணத்தில் தாய் தந்தைக்கு கல்லறை கட்டிய வழக்கு இலங்கையில் ஒக்டோபர் 15ம் திகதியிலிருந்து மூவரடங்கிய விஷேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனினும் கலிபோனியா வழக்குகளைப் போன்று இந்த வழக்குகளையும் ஒத்தி வைக்குமாறு கோத்தா மோசம் சமர்ப்பிக்கவில்லை.

இலங்கையிலும் அரச தலைவர்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன. அப்படியாயின் கோத்தா கல்லறை வழக்கினை ஒத்திவைக்குமாறு ஏன் மோசம் சமர்பபிக்கவில்லை.....?  அது வேறு எந்தக் காரணத்திற்காகவும் இல்லை, “நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியானது!” என கலிபோனியா மக்களுக்கு கூறும் போது அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், இலங்கையர்கள் இரண்டு கோணங்களிலும் சிரித்து விடுவதை கோத்தா தெரிந்திருப்பதனாலாகும.

மறுபுறத்தில் புரிந்து கோள்ள வெண்டிய விடயம்,கோத்தாய ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிட முன்வந்திருப்பது தனது வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே தவிற, நாட்டுக்குச் சேவை செய்வதற்காக அல்ல.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி