1200 x 80 DMirror

 
 

நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, தனியார் பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்து சேவைகள் இடம்பெறும், இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என அறிவித்துள்ளது.

நாட்டில் காலையிலும் மாலையிலும் மாத்திரமே பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களைக் கருத்திற் கொண்டு பேருந்து சேவைகள் இடம்பெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

மேலும் இரவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 25 வீதமான தனியார் பேருந்துகளே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.

நாளாந்த சேவைக்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் எதிர்கொண்டுள்ளன.

மேலும் சிலர், டீசலை பெறுவதற்காக ஒரு சில மணித்தியாலங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை இன்னும் சில சாரதிகள், தாம் 24 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண டிப்போக்களில் இருந்தே எங்களால் எரிபொருளை பெறமுடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வந்த போதிலும் இது தொடர்பில் கசப்பான விடயங்களே இடம்பெறுகின்றன. எரிபொருள் நெருக்கடி காரணமாக நீண்டதூர பேருந்துசேவை சாத்தியமற்றதாக மாறியுள்ளது எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அங்ஞன பிரியஞ்சித்  தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே பிரதான நகரங்களில் பேருந்துகளுக்காக ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்குமாறு பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் கோரியிருந்தார்.

அதற்கு, எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான டீசலை வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எரிபொருள் முறையாக கிடைக்காமையால் 70 வீதமான தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இனியும் டீசல் இல்லையெனில் இன்று அல்லது நாளை 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அங்ஞன பிரியஞ்சித் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கலந்துரையாடலொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி நுவரெலியா தலவாக்கலை மற்றும் ஹட்டனில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி