1200 x 80 DMirror

 
 

" நாட்டில் பெற்றோல் இல்லை. டீசலும் இல்லை. மின்சாரமும் இல்லை. இவை இல்லாததால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை அதனால் முதலீட்டாளர்களுக்கு வருமானம் இல்லை. ஊழியர்களுக்கு சம்பளமும் இல்லை. அரிசி வாங்க காசு இல்லை. குடிப்பதற்கு பால்மாவும் இல்லை”

 

இந்த நாட்டிலே எதை எடுத்தாலும் ´இல்லை´ என்றதொரு நிலைமையே உருவாகியுள்ளது. இதற்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும். இப்படியானதொரு நிலைமை உருவாக்கிய அரசை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர்.

என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் ஹட்டனில் நேற்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.


நாட்டில் பொருட்களின் விலையேற்றம், எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்ட நேர மின்வெட்டு, ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியே இப் போராட்டம் இடம் பெற்றது.

இந்த அரசு பெரும் சாபக்கேடாகும், எல்லா வழிகளிலும் இந்த அரசு நாட்டு மக்களை வதைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. எனவே, அரசை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். நாமும் அதற்கு பேராதரவை வழங்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நிச்சயம் நாம் நாட்டையும், மக்களையும் காப்போம். அதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது." – என்று தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் ஹட்டனில் நேற்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்திருந்ததைப் போன்று,

நுவரெலியா - கொத்மலை கடதொர பகுதியில் நேற்று (6) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவும் தேசிய வேலைத்திட்டம் பற்றிய தமது கருத்தை தெரிவித்திருந்தார்,

நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் என தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசிய வேலைத்திட்டமொன்று உள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களை பாதுகாக்கும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன.

தற்போது பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டுவருகின்ற. பல தரப்புகளிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி