பாணந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றில், பெண்கள் கழிவறைக்குச் செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர்
பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மத்துகம, நவுத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபர் அதே அலுவலகத்தில் பணிபுரிபவர் எனவும், அங்கு பணியாற்றும் பெண் கழிவறைக்குச் சென்றபோது, சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுப்பதைக் கண்டு முறைப்பாடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பாணந்துறை தெற்கு பொலிஸார், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டபோது, நீண்டகாலமாக பெண்கள் கழிவறைக்குச் செல்லும் காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவின் வழிகாட்டலில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.