leader eng

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி)

அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில், விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னதாக வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.

ரணில் விக்ரமசிங்க அவர்கள் நியூயோர்க்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திரும்பும் வழியில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி