Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு: மக்களின் 500 ஏக்கர் காணி கையக்கப்படுத்தல் பற்றிய செய்தி பொய்’

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2024 • 11:46 AM

‘பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு: மக்களின் 500 ஏக்கர் காணி கையக்கப்படுத்தல் பற்றிய செய்தி பொய்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் அப்படி எந்தவிதமான எண்ணமும் இந்தியாவிற்கு இல்லை எனவும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தம்மிடம் தெரிவித்தார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
  • பத்திரிகைகளில் 500 ஏக்கரை காணிகள் சுவீகரிக்கப்போவதாக வெளியான செய்திகள் எமக்குப் பேரதிர்ச்சியைத் தந்ததையும் நான் இந்தியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டினேன்.
  • யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவுபடுத்தல் சம்பந்தமாக மக்களின் 500 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனத் தூதுவர் சந்தோஷ் ஜா என்னிடம் தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் அப்படி எந்தவிதமான எண்ணமும் இந்தியாவிற்கு இல்லை எனவும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தம்மிடம் தெரிவித்தார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று (16) இரவு யாழில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்தியத் தூதுவருடன் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தால் ஏனைய பிரச்சினைகள் தானாகவே தீரும் என்ற அடிப்படையில் அவருடைய எண்ணங்கள், கண்ணோட்டம், பேச்சுக்கள் இருப்பதை அவதானித்தேன்.

இந்தியாவையும் இலங்கையையும் பாலம் அமைத்து அதனூடாக ஓர் இணைப்பை ஏற்படுத்தல் சம்பந்தமாக இந்தியத் தூதுவர் குறித்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வந்திருக்கின்றார்.

ஆகவே, இலங்கை- இந்திய தரைவழி இணைப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என நம்புகின்றேன்.

பத்திரிகைகளில் 500 ஏக்கரை காணிகள் சுவீகரிக்கப்போவதாக வெளியான செய்திகள் எமக்குப் பேரதிர்ச்சியைத் தந்ததையும் நான் இந்தியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டினேன்.

விமான நிலையத்தின் அபிவிருத்திக்குத் தற்போது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளே போதுமானவை என்பதை இந்தியத் தூதுவரிடம் நான் தெளிவுபடுத்தியிருந்தேன்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவுபடுத்தல் சம்பந்தமாக மக்களின் 500 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனத் தூதுவர் சந்தோஷ் ஜா என்னிடம் தெரிவித்திருந்தார்.

அப்படி எந்தவிதமான எண்ணமும் தமக்கு இல்லை எனவும், இந்தியா அரசிடம் எதுவிதமான காணிகளைப் பெற்றுத்தருமாறு கோரவில்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டால் தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் ரீதியாகவும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்தியத் தூதுவர் தெரிவித்தார் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...