Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

5ஆவது முறையாகவும் ஜனாதிபதியானார் புட்டின்

T

The Leader Desk

மார்ச் 18, 2024 • 2:46 AM

5ஆவது முறையாகவும் ஜனாதிபதியானார் புட்டின்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • புட்டினுக்கு எதிரான போட்டியிடக் கூடிய வலுவான வேட்பாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
  • இம்முறை தேர்தலில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி புட்டின் ஐந்தாம் தடவையாகவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப் பகுதியில் பல்வேறு எல்லைப் பகுதிகளில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தேர்தலில் புட்டினை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் என்பதுடன் அவர்கள் பெயரளவில் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புட்டினுக்கு எதிரான போட்டியிடக் கூடிய வலுவான வேட்பாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டவாரே தேர்தலில் தாம் வெற்றியை பதிவு செய்ததாக புட்டின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியை மட்டுப்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் முயற்சிகளை முறியடித்து ரஸ்ய மக்கள் தங்களது ஒற்றுமையை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இராணுவத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...