அமைச்சர் கபீர் ஹாசிமின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வரையறுக்கப்பட்ட அரச கனிய எண்ணெய் வள கூட்டுத்தாபனம் உட்பட சில நிறுவனங்களை

அவரது அமைச்சின் கீழ் இருந்து நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது. 

இவ்வாறு நீக்கப்படும் அனைத்து நிறுவனங்களையும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அமைச்சின் கீழ் கொண்டு வருமாறும், பிரதமர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.இருப்பினும் இதற்கான இணக்கத்தை னாதிபதி மைத்தரிபால சிறிசேன வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சில நிறுவனங்களையும் அந்த அமைச்சின் கீழ் இருந்து நீக்குமாறு பிரதமர், ஜனாதிபதிடம் கோரியுள்ளார்.

 எனினும் இதனை எழுத்துமூலமாக ஜனாதிபதியிடம் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இரண்டு அரச வங்கிகளை நிதியமைச்சிடமிருந்து நீக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு  நெருக்கமாக இருந்து வந்த அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாச அணியின் முக்கியஸ்தர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துமாறு இவர்கள் கட்சியின் தலைமைக்கு கடுமையாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

 இதனால், இந்த அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிறுவனங்கள் நீக்கப்படுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி