அச்சகமொன்று மூடப்படுவது என்பது பாடசாலை அல்லது பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது என்று சிறுவர் புத்தக எழுத்தாளர், ஆசிரியர், கவிஞரான விபுலி நிரோஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அர்வ இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

நூறு அச்சகங்கள் மூடப்படும்.... அச்சுக் கைத்தொழில் நின்றுவிடுமா? என்ற ஒரு செய்தியை நான் கண்டேன். இந்த செய்தியைக் கேட்டதும் ஓர் ஆசிரியை என்றவகையில் பாடசாலையொன்று மூடப்படுமாயின் பத்து சிறைச்சாலை திறக்கப்படும் என்ற கதையே எனக்கு ஞாபகம் வந்தது. அது எனது மனதால் உணரத்தக்க கதையாகும். அச்சகமொன்று மூடப்படுவதென்பது பாடசாலை, பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றதாகும் என்ற கதைக்கு இணையானதாகும். அதாவது பத்து சிறைச்சாலைகள் திறக்கப்படும் என்பதாகும். கடதாசி தட்டுப்பாடு என்பது கேஸ், பால் மா, சீமெந்து போன்ற மற்றுமொரு தட்டுப்பாடு மாத்திரமா? அச்சுக் கைத்தொழில் என்பது மானிட நாகரிகத்தின் ஒரு மைல் கல்லாகும். எழுத்திலான தொடர்பாடல் மிகவும் பாரதூரமான சவாலுக்கு இலக்காகி உள்ளது. இலக்கிய இரசனை, பிள்ளைகளின் கல்வி சவாலுக்கு இலக்காகி உள்ளது. அது அனைவராலும் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

இந்த கடதாசி தட்டுப்பாடு காரணமாக விலையேற்றம் காரணமாக கடதாசிக்காக மிகையான செலவினை ஏற்க நேரிட்டால் அச்சுக் கைத்தொழிலின் சிறிய வணிகத்தொழில்முயற்சிகள் சீரழிவதற்கான அபாயநேர்வு நிலவுகின்றது. ரூபா 5000 செலவிட்டு எடுக்கமுடிந்த அளவிலான கடதாசியை மேலும் ரூபா 2000, 3000 மேலதிகமாக செலவிடவேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகும். சிறிய அளவிலான அச்சகத்தாரை கல்விப் பாடப்புத்தக தயாரிப்பினை இது எவ்விதமாக பாதிக்கும்?

கொவிட் நிலைமை காரணமாக பிள்ளைகள் இணையத்தளக் கல்விக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு, பழக்கப்பட்டு வருகிறார்கள். அது எந்தளவுக்கு சிக்கலான விடயமென்பதை தற்போது புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. அது வெற்றிகரமான பயனுறுதிமிக்க நிலைமையல்ல. அத்தகைய நிலைமையில் புத்தகமொன்றைக் கையில் எடுப்பதுதான் பிள்ளைகளுக்குள்ள உளநிலை அபிவிருத்தியின் படிமுறையாக அமைகின்றது. பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்தால் மாத்திரம் போதாது. உளநிலை அபிவிருத்திக்கு புத்தகங்கள் அவசியமாகும். பிள்ளைகளின் அறிவுவிருத்திக்கு புத்தகங்கள் எவ்வளவு முக்கியமானவை. புத்தகம் என்பது பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமானது. கல்வி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளவும் பாடநூல் தயாரிப்பாளர்கள் இந்த கடதாசி தட்டுப்பாடு தொடர்பிலான முன்னாயத்தம் செய்யவேண்டியுள்ளது.

பிள்ளைகளுக்கான மேலதிக புத்தகங்களை ஆக்கவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இன்றளவிலும் அது போதியளவில் இடம்பெறுவதில்லை. அவ்வாறான நிலைமை காணப்படுகையில் கடதாசி தட்டுப்பாடும் தாக்கமேற்படுத்தினால் எமது பிள்ளைகளின் கல்விக்கு, எதிர்காலத்திற்கு என்ன கதி நேரிடும்? அந்த நிலைமையில் ஸ்மார்ட் போனி்ல், இணையத்தளத்தில் எமது பிள்ளைகள் புத்தகங்களை வாசிக்கின்ற நிலைமை ஏற்பட்டால் அதன் எதிர்காலத் தாக்கத்தை எவ்வாறு தீர்க்கவேண்டி வருமென நினைத்துப் பார்க்கவேண்டும். எனவே இந்த விடயம் சம்பந்தமாக எந்தநேரத்திலும் குரலழுப்ப நான் தயார். 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி