1200 x 80 DMirror

 
 

சந்தையில் தற்போது பனடோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


டொலர் நெருக்கடியினால் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், என்டிபயடிக் எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்திக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும், பனடோல், பரிசிட்டமோல் உள்ளிட்ட பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

விநியோகத்தர் மூலம் குறைந்தளவான மருந்துகளே மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன், வாடிக்காயாளர்களுக்கும் குறிப்பிட்டளவு மனடோல் மருந்துகளை மட்டும் வழங்க மருந்துகங்கள் ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, தட்டுப்பாடு நிலவும் மருந்துப் பொருட்களை அதிக விலைக்கு சில மருந்தகங்கள் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் விறகு மாறிய மக்கள், பால் மா தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் பால் அற்ற தேனீருக்கு மாறிய மக்கள் தற்போது மனடோல் தட்டுப்பாடு ஏற்பட்டால் பாட்டி வைத்தியத்திற்கு மாறிவிட வேண்டியது தான் போன்ற பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி