1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இந்திய மீனவர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்கியதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை மீனவரின் இழுவைப் மடிப் படகுகளை வெட்டிச் சேதப்படுத்தி, தப்பிச் சென்றுள்ளதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாதகல் கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவைப் படகுகளை, வடமராட்சி கடலில் இலங்கை மீனவர்கள் சுற்றிவளைத்துள்ளனர். இதன்பின்னர் இந்திய இழுவைப் படகை இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Fishing N 2

இந்தச் சம்பவத்தை அடுத்து சுப்பர் மடம் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நிலைமையை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கடற்றொழில் அமைச்சருக்கு, மீனவர்கள் எதிர்ப்பு தெிரவித்ததால், அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.

மீனவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், இதனால் தான் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் என்ன கூறுகிறார்?

''13ம் சீர்த்திருத்தம் வேண்டாமென தற்போது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழ் கட்சிகள் சில மீனவர்களுக்கு மதுபானத்தைக் கொடுத்து பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

''இலங்கை, இந்திய மீனவர்களின் மோதல் தீவிரமடைந்துள்ளது.மக்கள் ஆத்திரமடைந்து சட்டத்தினை கையிலெடுத்து இந்திய மீனவர்களை பிடிக்க சென்றுள்ளனர். இதன் காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்னர் கடலில் கொலையும் இடம்பெற்றுள்ளது.சடலங்கள் நேற்று கரையொதுங்கியுள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய வன்முறைகளினால் வட பகுதி மக்கள் கடற்றொழிலினை மேற்கொள்ள முடியாது சிரமப்பட்ட நிலையில், வன்முறைகளுக்கு முடிவு கட்டிய பின்னர் கடற்றொழிலுக்கான நிம்மதியான சூழல் நிலவி வருகின்றது.

13ம் சீர்த்திருத்தம் வேண்டாமென தற்போது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழ் கட்சிகள் சில மீனவர்களுக்கு மதுபானத்தினை பெற்றுக்கொடுத்து சில பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி, கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று இந்திய படகுகளால் நேற்று முன்தினம் இரவு பதற்றமான சூழல் நிலவியிருந்தது.

இதன்போது, இந்திய மீனவர்களுக்கும்,இலங்கை மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்திய மீனவர்களினால் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது சில மீனவர்கள் தமிழ் கட்சிகளில் தூண்டுதலில் பிரச்சினையை விளைவித்தனர்,பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பி வந்துவிட்டேன்.'' என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் மீது உள்ள அதிருப்தியினால் அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனையடுத்தே அங்கிருந்து அமைச்சர் தப்பியோடியதாகவும் அங்கு கூறியிருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

Fishing N 3

 

 

வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய மீனவர் சடலங்கள்

இந்திய - இலங்கை மீனவரிடையே ஏற்பட்ட மோதுக்கு மத்தியில் வடமராட்சி கிழக்கு கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரு மீனவர்களின் சடலங்களும் நேற்றிரவு கரையொதுங்கியுள்ளன.

கடந்த வியாழ்க்கிழமை கடலுக்குச் சென்ற இந்த மீனவர்களின் சடலங்கள் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.

கிளிநொச்சி நீதிபதி முன்னிலையில் சடலங்கள் அடையாளம் காட்டப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி