இனவாதமே இந்நாட்டின் பொருளாதார வீழ்சிக்கு காரணமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசாங்கம் இனவாதம் பேசியே ஆட்சி அமைத்தது. அன்று தொடக்கம் இன்றுவரை இனவாதம் பேசி இந்த நாட்டில் வாழும் தமிழ் முஸ்லீம் சிறுபான்மை மக்களை ஓரங்கட்டி வைத்துள்ளார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தனது பதவியேற்பு வைபவத்தின் போது சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களிக்க வில்லை பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாதிரம் தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதாக தனது முதலாவது உரையிலே இனவாதத்தை பேச ஆரம்பித்து விட்டார்.

இந்த அரசாங்கம் இனவாதத்தைப்பற்றி சிந்தித்தார்களை தவிர நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றி சிந்திக்க வில்லை. நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான எந்தவொரு கொள்கை வேலைத்திட்டமும் இல்லாமல் ஆட்சி நடத்துவதால் இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இருக்கின்றது.

இனவாதம் பேசிய எந்தவொரு நாடும் வளர்சியடைந்ததாக சரித்திரமே இல்லை. இந்த நாட்டின் தற்பொதைய ஆட்சியாளர்கள் இனவாதத்திற்கு காட்டும் அக்கரை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு காட்டுவதில்லை. இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குறிப்பிடதக்க பெரிய அபிவிருத்தி வேலைகள் எதுவும் செய்யவில்லை.

நாட்டில் இன ரீதியாக மக்களை பிரித்து எந்தவொரு அபிவிருத்தி வேலைகளில்முன்னேற்றம் காணமுடியாது. பெருபான்மை என பேதமில்லாமல் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணமுடியும்.

இது இவ்வாறிருக்க அன்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் பற்றியோ அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகளை பற்றியோ சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதாரம் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இதனை பார்க்கும் பொழுது சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு இந்த ஆட்சியாளர்களிடம் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாதென்பது திட்டவட்டமாக தெரிகின்றது.

எனவே அனுபவமில்லாத அரசியல்வாதிகள் ஆட்சி நடத்துவதாலே நாட்டில் இனவாதம் மேலோங்கி பொருளாதாரம் வீழ்சியடைந் துள்ளது. நாட்டில் பொருதாரம் மறு மளர்சி பெற வேண்டுமானால் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை. இதனை அனைத்து மக்களும் உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி