சுசில் பிரேமஜயந்தவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் theleader.lk தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த போன்றவர்களை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் தமக்கு இருப்பதாக நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தமை தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

உணவு நெருக்கடிக்கு பொறுப்பான அமைச்சர்களும் கொள்கை வகுப்பாளர்களுமே பொறுப்பு என்றும், நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளுக்கு தீர்வுகாண வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும், அவற்றைத் தீர்ப்பது வேறு குழுவின் கையில் இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் வலியுறுத்தினார்.

பொருட்களின் விலை உயர்வுக்கு வர்த்தக அமைச்சர், விவசாய அமைச்சர் மற்றும் உணவு அமைச்சர் ஆகியோரே காரணம் என தெரிவித்த திரு.பிரேமஜயந்த, விவசாய அமைச்சர் முழு தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தனர். அப்போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை இலக்கு வைத்து மிகவும் பொறுமையிழந்து ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்கு குறித்து ஜனாதிபதி கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி