தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானம் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


