கவிதை எழுதியதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கவிஞருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு 18 மாதங்களுக்கு மேலாகியுள்ளது.

நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜசீம், 2020 மே 20 அன்று பொலிஸ் பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவருக்கு பினை வழங்கப்படவில்லை.

அவரது அடிப்படை உரிமைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​அஹ்னாப் ஜசீமுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்க்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா, நீதியரசர்களான குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

புத்தளம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது அஹ்னாஃப் ஜசீமுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் எதிர்க்க மாட்டார் என ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கவிஞருக்கு எதிராக அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் அஹ்னாஃப் ஜசீமுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் எதிர்க்கமாட்டார் என சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அஹ்னாஃப் ஜஸீமின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 8ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே.அனகேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ. மிலியஸ்,லக்ஷ்மன் ஜெயக்குமார், சஞ்சய வில்சன் ஜயசேகர, ஸ்வஸ்திகா அருலிங்கம் மற்றும் சட்டத்தரணி தரிந்து ரத்நாயக்க ஆகியோர் எஸ்.ஜே.தேவபாலனின் ஆலோசனைக்கமைய அஹ்னாஃப் ஜசீமுக்கு ஆதரவாக கலந்துகொண்டனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி